குறைந்த தங்கத்தின் விலை இன்று சடுதியாக அதிகரிப்பு!!

அண்மை நாட்களில் டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடைந்து வந்தது. இன்றைய தினமும் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.62 ரூபாவாகவும் விற்பனை விலை 328.90 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இந்த நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வரும் நிலையில் நாட்டில் தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி பதிவாகி வந்தது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 40,000 வரை குறைந்திருந்தது.

கடந்த காலங்களில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 180,000க்கும் மேல் இருந்தது. எனினும் நேற்றைய தினம் சுமார் 133,000 வரை விலை குறைவடைந்திருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலையில் திடீரென பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. டொலரின் விலை குறைவடையும் இவ்வோளையிலும், தங்கத்தின் விலை இன்று சடுதியாக அதிகரித்துள்ளது.