மட்டக்களப்பு - வாழைச்சேனை வீதியில் வாகன விபத்து : தாத்தாவும் பேத்தியும் உயிரிழப்பு!

(ரூத் ருத்ரா)

மட்டக்களப்பு சந்திவெளி பிரதான வீதியில் நேற்று திங்கள்கிழமை மாலை (18) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.

இதில் காத்தான்குடியைச் சேர்ந்த 4 வயதுடைய சிறுமியும் 52 வயதுடைய சிறுமியின் முத்தப்பாவான முகம்மது ஹீசைன் ஸ்த்தலத்திலே உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவரே வாகனத்தைச் செலுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் 49 வயதுடைய சிறுமியின் மூத்தம்மா காயமடைந்த நிலையில் சந்திவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடியில் இருந்து 3 பேருடன் கொழும்பு விமான நிலையத்திற்கு சென்ற வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்துடன் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.குறித்த சம்பவம் இடம்பெற்றவேளை பிரதேசத்தில் கடும் மழை பெய்துள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது சவுதியரேபியா நாடொன்றில் குடும்பத்துடன் வசித்து வரும் தமது மகளை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக தமது பேத்தியுடன் சென்ற வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் பிரதேசத்தில் மக்களிடையே ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சந்திவெளி கொழும்பு பிரதான வீதியில் அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுவது தொடர் கதையாகவுள்ளது.குறித்த விபத்து தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.