கல்வி முறைமையானது சமூக அமைப்பினை பிரதிபலிக்கும் கண்ணாடியாக விளங்குகிறது. இதனால் கல்வியமைப்பு கற்பிக்கும் பாடங்கள், கற்பித்தல் முறைகள் கல்வியின் இறுதி இலக்கு என்பன சமூக அமைப்பு, அதன் குறிக்கோள்கள், நோக்கங்கள் என்பவற்றுடன் இணைந்தவை.
இதனால் மாணவர்களுக்கு இலகுவான முறையில் கற்பித்தலினை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு கல்விச் சமூகவியல் அறிவானது மிகவும் உறுதுணை புரிவதாக காணப்படுகின்றது. பாடசாலையில் பயிலுகின்ற மாணவர்களை சமூக இயல்பினர்கலாக்கும் செயன்முறை ஆசிரியர்களின் பிரதான பணிகளில் ஒன்றாக காணப்படுவதால் இச்செயன்முறை வெற்றிக்கு ஆசிரியர்கள் கல்விச்சமூகவியல் அறிவினை பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாக காணப்படுகின்றது.
ஆசிரியர்களுக்கு தமது கல்விப் பணியின் மூலமாக ஆற்றக்கூடிய செயற்பாடுகளை விளக்குவதற்கு கல்விச்சமூகவியல் அறிவு மிகவும் பயனுள்ளதாக காணப்படுகிறது. மேலும் சமூகத்தின் பண்டைய மரபுகளை பேணி அவை சிதைவடையாமல் பாதுகாத்து அடுத்தவரும் பரம்பரைகளுக்கு ஒப்படைப்பதற்கு கல்விச்சமூகவியல் அறிவு ஆசிரியருக்கு பயனுள்ளதாக காணப்படுகின்றது. கல்விச் சமூகவியல் அறிவானது ஆசிரியர்களுக்கு குழந்தைகளின் பின்னணியினை புரிந்துகொள்ள உதவுகிறது.
பாடசாலையில் மாணவர்கள் கொண்டுவரும் பல இடையூறுகளை சமாளிக்கும் ஆற்றலை கல்விச் சமூகவியல் வழங்குகிறது. மனித உறவுகள் மிகவும் சிக்கலானது என்பதால் ஒரு குழுவின் நடத்தையின் சில விளைவுகளைப் பற்றி அறிந்திருக்கவும், கற்பித்தலை பாதிக்காத வகையில் அவர்களைச் சுற்றியுள்ளவர்களின் மனப்பான்மை, மதிப்புகள் மற்றும், நம்பிக்கைகளை புரிந்துகொள்ளவும், கல்விச்சமூகவியலின் அறிவு ஆசிரியர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், அவர்களது வினையாற்றலை அதிகரிக்கும் செயற்பாடாகவும் காணப்படுகின்றது.
கல்விச் சமூகவியல் அறிவானது ஒரு சமூகத்தில் உள்ள வளர்ச்சி நிலைகளையும், அச்சமுகத்தின் உணர்வுகள் மற்றும் சமூகம் சார்ந்த அறிவுகளை அறிந்துகொள்ள ஆசிரியர்களுக்கு முடிகின்றது. சமூகத்தின் ஊடாக ஆசிரியர்களுக்கு ஏற்படுகின்ற எவ்வாறான ஓர் இக்கட்டான பிரச்சினைகளையும் நிதானமாக தீர்த்துக் கொள்வதற்கு கல்விச் சமூகவியல் சார்ந்த அறிவு ஆசிரியருக்கு பயன்படுகிறது.
கற்பித்தல் செயற்பாட்டினை சிறப்பாக ஆசிரியர் முன்னெடுத்து செல்வதற்கு கற்பித்தல் செயற்பாடு இடம்பெறுகின்ற சமூகத்தைப் பற்றிய அறிவு ஆசிரியருக்கு அவசியம். ஆசிரியர்கள் கல்விச்சமூகவியலினை கற்பதன் ஊடாக சமூகத்திற்கும் கல்விக்கும் இடையில் தொடர்புறும் பாலமாக செயல்பட முடியும்.
கல்விச் சமூகவியலின் ஊடாக ஆசிரியர் சமூகத்தில் உள்ள மக்கள் சிந்திக்கும் விதம், வாழ்க்கைக்கோலம், வேலை செய்யும் விதம், சமூகத்தில் அவர்களின் இருப்பு மற்றும் அவர்களது வெற்றிகள், அவர்களது தோல்வி வாய்ப்புகளை பாதிக்கும் காரணிகள் தொடர்பாக அறிந்து இது தொடர்பான அறிவினை அச்சமூகத்தில் இருந்து வரும் மாணவர்களின் கற்பித்தலில் பிரயோகிக்கும் போது சமூகத்தோடு ஒன்றிய கற்பித்தல் செயற்பாடு இடம்பெறுகின்றது.

இதனால் கற்பித்தல் வெற்றிகரமாக இடம்பெறும். ஒவ்வொரு மாணவரையும் தனிப்பட்ட அளவில் சிந்திக்கவும், ஒவ்வொரு மாணவர்களின் தேவைகளுக்கு ஏற்றால்போல் பாடத்தை வழங்கவும்,; ஒரு மாணவர் எவ்வாறு கற்றுக்கொள்கின்றார்கள் என்பதை அவர்களது செயற்பாடுகளை வைத்து அறிந்து கொள்ளவும், சமூகவியல் அறிவானது ஆசிரியருக்கு மிகவும் உதவியாக காணப்படுகின்றது.
ஒரு குழந்தையின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர் ஆசிரியர் ஆவார். குழந்தையின் வளமான எதிர்காலத்திற்குப் பாடசாலையில் ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியருடையதாகும். மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியர், ஆசிரியராகத் தன்னுடைய பாடசாலையில் ஆற்றவேண்டிய கடமைகளை சமூகம் சார்ந்த கோணங்களில் நன்கு உணர்ந்துகொண்டு செயல்படுவதற்கு கல்விச்சமூகவியல் அறிவு மிகவும் உறுதுணையாக காணப்படுகிறது. மாணவர்களின் எதிர்காலம் ஆசிரியர் கையில் என்பதை நாம் நன்கறிவோம்.

ஒரு வகுப்பில் பல்வேறு குடும்பப் பின்னணிகளையுடைய மாணவர்கள் ஒருங்கே அமர்ந்திருப்பர். அவர்களது வாய்ப்புகளும் வளர்ப்புச் சூழ்நிலைகளும் வெவ்வேறானவை என்பதை அறிந்து அதற்கேற்றால்போல் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்த கல்விச்சமூகவியல் அறிவு ஆசிரியருக்கு பயன்படுகிறது.
ஆசிரியர் சமூக மாற்றத்தை நன்கு திட்டமிட்டு வழிநடத்த கல்விச் சமூகவியல் அறிவு முக்கியமானதாக காணப்படுகின்றது. இன்றைய தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களின் மனப்பான்மையை மாற்றி, வேலைக்குச் செல்லும் குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்புமாறு செய்யவேண்டும். படிப்பை இடையில் நிறுத்திவிட்ட மாணவர்களுக்கு அரசின் கல்வி நலத்திட்டங்களை எடுத்துக் கூறி மீண்டும் படிப்பைத் தொடர வழிவகைகளை செய்யவேண்டும்.

பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு சுயவேலை வாய்ப்புத் திட்டம் பற்றிக் கூறி அதன் மூலம் பயனுறுமாறு செய்யவேண்டும். இவ்வாறு ஆசிரியர் பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வினைத்திறனான ஆசிரியர் செயற்பாட்டை மேற்கொள்ள கல்விச்சமூகவியல் அறிவானது அவருக்கு மிகவும் உறுதுணையாக காணப்படுகின்றது.
ஆசிரியர், மாணவர் உறவுமுறையை வலுப்படுத்த வேண்டியது கல்விச் சூழலில் மிகவும் தேவையானதாகும். ஆசிரியரும் மாணவர்களும் யாதொரு தடையுமின்றிக் கற்றவற்றைப் பற்றி தமக்குள் மனம் விட்டு விவாதிப்பதற்கு, மாணவர்களைச் சுதந்திரமாகக் கேள்விகள் கேட்கத் தூண்டுவதற்கு, ஆசிரியர் அவற்றுக்கெல்லாம் தக்க விடையளித்து மாணவர்களின் ஐயங்களைப் போக்குவதற்கு, கற்பிக்கையில் மக்கள் வாழ்க்கையிலிருந்தே பல செய்திகளையும் எடுத்துக்காட்டுகளையும் கூறி விளக்கம் அளிப்பதற்கு, மாணவர்களின் அறிவு வேட்கையைத் தூண்டி, ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்ப்பதற்கு கல்விச் சமூகவியல் அறிவானது பயனுள்ளதாக ஆசிரியர்களுக்கு காணப்படுகின்றது.
ஆசிரியர் தன் மாணவர்களின் குடும்பச் சூழ்நிலையைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். மாணவர்களின் பெற்றோர்களுடன் மாணவர்களின் முயற்சி, வளர்ச்சி பற்றிக் கலந்தாலோசித்து மனிதநேயம் வளர்ப்பவராகத் திகழ்வதற்கு கல்விச்சமூகவியல் பற்றிய அறிவு ஆசிரியர்களுக்கு அவசியமானதாக காணப்படுகின்றது.
ஆசிரியர்கள் குழந்தைகளின் மூன்றாவது பெற்றோர். அப்பா, அம்மாவுக்கு அடுத்தபடியாக குழந்தைகள் ஆசிரியரிடம் தான் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். ஆசிரியர்கள் அவ்வெதிர்பார்ப்புகளை நிறைவேற்றித் தரவேண்டும். குழந்தைகள் ஒரு நாளின் பெரும்பகுதியை ஆசிரியருடன் தான் கழிக்கின்றனர். பாடசாலை மாணவர்களுக்கு இப்பருவம் சமுதாய வாழ்வின் ஆரம்பம் என்பதால், பாடப்பொருள் தவிர பிற கற்றுக்கொள்ள வேண்டியவைகளும் அதிகம் உள்ளன.

மாணவர்களின் திறமைகள் வளர்க்கப்பட வேண்டியிருப்பதால் ஆசிரியர் அவர்களைப் பற்றிய அக்கறை மிகவும் கொண்டவராகவும், அவர்களிடம் பரிவுணர்வு கொண்டவராகவும் இருத்தல் அவசியமாகும். பரிவும் ஒத்துணர்வும் ஆசிரியரின் வெற்றிக்கு வகை செய்ய வல்லவைகளாக காணப்படுவதால் கல்விச் சமூகவியலின் ஊடாக இவ்வாறான அறிவினைப் பெற்றுக்கொள்வதால் ஆசிரியர்கள் மாணவர்களின் சுயதேவைகளை கருத்தில் கொண்டு அவர்களது உணர்வு நிலைகளை விளங்கிக் கொண்டு அதற்கேற்றால் போல் தனது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை திட்டமிட்டு ஒழுங்கு அமைத்துக் கொள்ள கல்விச்சமூகவியல் அறிவு என்பது மிகவும் பயனுள்ளதாக காணப்படுகின்றது.
ஆசிரியரானவர் தான் கற்பிக்கின்ற சூழலை சுற்றியுள்ள சமூகத்தில் உள்ள விதிமுறைகளையும் மதிப்புகளையும் புரிந்து கொள்ள வேண்டும். தனிநபர்களின் செயல்களை குழுவிற்கு புரிய வைக்கும் பொதுவான பிரிவு கலாச்சாரம் ஆகும். எனவே கல்விச் சமூகவியலை ஆசிரியர் கற்பதன் ஊடாக மாணவர்களை குழு முறையாக இணைத்து சமூகத்திற்குள் உள்நுழைய வைக்கமுடியும்.

ஒரு ஆசிரியர் சமூகத்தில் உள்ள கலாச்சாரத்தை நன்கு அறிந்திருந்தால் கலாச்சார பின்னணியில் இருந்து வருகின்ற பிள்ளைகளுக்கு சீரான முறையில் கற்பித்தலினை மேற்கொள்ளமுடியும். மேலும் கல்விச் சமூகவியல் அறிவின் ஊடாக ஆசிரியர் வகுப்பில் குழந்தைகளின் நடத்தைகளை புரிந்துகொள்ள முடியும். மாணவர்களின் நடத்தைக்கு மாணவர்களின் பெற்றோர்களின் செயற்பாடுகள் எவ்வாறு முக்கிய காரணங்களாக திகழ்கின்றது என்பதனை அறிந்துக்கொள்ளவும் உதவுகின்றது.
ஆசிரியர்கள் பாடசாலையில் ஏனைய சக ஆசிரியர்களுடனும், மாணவர்களுடனும், அதிபர்களுடனும் தொடர்பினை பேண வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. ஆசிரியர்கள் சமூக வாழ்க்கையில் பங்கேற்கவும், தமது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை சீரான வேகத்தில் நடத்தி செல்வதற்கு மாணவர்களோடு நெருங்கிய தொடர்பினை பேணவும், அதிபர், ஆசிரியர்களுக்கு இடையிலான உறவினை வலுப்படுத்திக் கொள்ளவும், சமூகத்தினை மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டுக்கு ஏற்றால்போல் தொடர்புபடுத்திக் கொள்ளவும், கல்விச்சமூகவியல் சார்ந்த அறிவு ஆசிரியருக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.
கல்விச் சமூகவியலினை கற்பதன் ஊடாக ஆசிரியர்கள் பிள்ளைகளின் குடும்பப் பின்னணிகளை அறிந்துகொள்ள உதவி செய்கின்றது. வகுப்பறையில் ஒரு மாணவன் நன்றாக கற்கின்றான். ஆனால் அவனால் சீராக பாடசாலை வருகை தர முடியாதுள்ளது, கற்றல் உபகரணங்கள் இல்லாது காணப்படுகின்றான், வகுப்பறையில் அதிக நேரம் உறக்கத்தில் ஈடுபடுகின்றான் போன்ற காரணங்களை வைத்துக்கொண்டு மாணவன் குடும்ப சூழ்நிலை, பொருளாதார பின்னடைவில் உள்ளான்.

இதனால் தான் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார் என்பதனை அறிந்துகொண்டு ஆசிரியரால் இயன்ற உதவிகளை ஏற்பாடு செய்து கொடுத்து அம்மாணவனை கற்றலில் முன்னேற்றகரமான செயற்பாடுகளை செய்ய ஊக்குவிக்கும் ஆற்றலினை கல்விச்சமூகவியல் அறிவின்னூடாக ஆசிரியர் பெற்றுக் கொள்கின்றார்.
சிவசேகரம் ராதிகா,
நான்காம் வருட கல்வியியல் சிறப்புக் கற்கை மாணவி,
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை,
கலை கலாசார பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம்.