மின்சாரம், பெற்றோலியம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிப்பு!

புதிய வர்த்தமானியின் மூலம் பல சேவைகள் அத்தியாவசியமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மின்சாரம் மற்றும் பெற்றோலியம் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியின் செயலாளரின் கையொப்பத்தின் கீழ் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.