இலங்கை 2500 ஆண்டுகளுக்கு முன் நாகரிகமடையத் தொடங்கியதிலிருந்தே கல்விக்கு முக்கியத்துவமளித்து வருகிறது. இலங்கையின் சுதேசிகள் தத்தமது நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகள், புராணக்கதைகள் முதலியவற்றினூடான முறைசாராக் கல்வி முறைகளை முன்னெடுத்து வந்தனர். ஒல்லாந்தர் காலத்தில் (கி.பி 1658-1796) கல்விக்கான முழுப் பொறுப்பையும் அரசே செயற்படுத்தியது. கட்டாய கல்வி அமுல்படுத்தப்பட்டது. பாடசாலைக்கு சமூகமளிக்காத பிள்ளைகளின் பெற்றோர் தண்டிக்கப்பபட்டார்கள். பதினைந்து வயது வரைக் கட்டாயக் கல்வி பின் நான்கு வருடங்கள் வளர்ந்தோர் கல்வி எனும் முறை காணப்பட்டது.
1930களில் இலங்கையில் இலவசக் கல்வி முறைக்கான அடித்தளங்கள் இடப்பட்டமை முதல் இங்கு நவீன கல்வியுகம் தோன்றியது எனலாம். 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளும், தங்கள் வீட்டிற்கு அருகாமையிலுள்ள பள்ளியில், இலவச மற்றும் கட்டாயக் கல்வி கற்க உரிமை பெறுகிறார்கள். ஆரம்பக் கல்வி பெற. குழந்தைகளோ அவ்ளது பெற்றோரோ நேரடியான (பள்ளிக் கட்டணம்) மற்றும் மறைமுகமான (சீருடைகள், பாடப் புத்தகங்கள், மதிய உணவு, போக்குவரத்து) எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. குழந்தைகளின் ஆரம்பக் கல்வி பூர்த்தியாகும் வரை, கல்விக்கான அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும்.
இவ்வாறு இலங்கை ஏறக்குறைய 2300 வருடங்களுக்கு முற்பட்ட கல்வி வரலாற்றைக் கொண்டிருந்த ஒரு நாடாக காணப்படுகின்றது. தற்போது இலங்கை 98 கல்வி வலயங்களை உள்ளடக்கிய 25 மாவட்டங்களை கொண்டுள்ளது. குழந்தைப் பருவக் கல்வி, ஆரம்ப நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி ஆகியவற்றை வழங்கும் தனியார் மற்றும் அரச நிறுவனங்கள் நாட்டில் காணப்படுகின்றன. கல்வி நீண்ட காலமாக அடிப்படை மனித உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கும் வாழ்க்கை வாழ்வதற்கும் சமூகமானது அரசியல், பொருளாதார, கலாச்சார ரீதியாக தங்களை முன்னிலைப்படுத்தவும் கல்வி வளர்ச்சி முக்கியமானதாக காணப்படுகின்றது.
1940 ஆம் ஆண்டு இலவச கல்வி முறையானது நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு தென்னாசிய நாடுகளிலே 98.1% எழுத்தறிவு கொண்ட மக்கள் தொகையை கொண்ட நாடாக இலங்கை திகழ்கிறது. “சமனான கல்வித் தரம் மற்றும் வாழ்நாள் முழுவதும் அனைவருக்குமான கற்றல் வாய்ப்புகளை ஊக்குவித்தல்" போன்றவற்றினை உறுதிசெய்வதன் மூலம் சர்வதேச நிகழ்ச்சி நிரலில் கல்வி சமத்துவமானது உள்ளடக்கப்பட்டுள்ளது (ஐக்கிய நாடுகள்). எனவே, பாலினம், பிறந்த இடம், இனம், மதம், செல்வம் அல்லது ஊனமுற்றோர் போன்ற ஒரு நபரின் கட்டுபாட்டிற்கும் அப்பாற்பட்ட தனிப்பட்ட சூழ்நிலைகளால் தரமான கல்வி வாய்ப்பு மற்றும் கற்றல் விளைவுகள் பாதிக்கப்படக்கூடாது.
இவ்வாறு இலங்கையில் ஒரு முறையான கல்வியானது தோற்றம் பெற்ற காலத்திலிருந்து தரமான கல்வி, கல்வியில் சமத்துவம், இலவச கல்வி போன்ற சொற்பதங்களே கல்வியின் அடித்தளமாக இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இவற்றை கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் இன்றைய பிரத்யேக வகுப்புகளின் வருகை காணப்படுகிறது. இங்கு தரமான கல்வி வழங்கப்படுகின்றதா? என்பது ஒரு புறமிருக்க மாறாக இலவசமாக அதேநேரம் சமமான கல்வி வழங்கப்படுகின்றதா என்பது ஆராயப்பட வேண்டிய விடயமாக உள்ளது.
மாணவர்களுக்கு கற்றல் செயல்பாடுகளை வழங்கும் பிரத்யேக வகுப்புகள் நன்மை தானே என்ற ஒரு வினா எழுப்பப்பட்டால் ஆம் நன்மை தான் என்று கூற முடியும். ஆனால் இன்றைய பிரத்யேக வகுப்புகள் கற்றல் செயல்பாடுகளை மட்டுமா முன்னிலைப்படுத்துகின்றன என்றால் இல்லை என்பதுதான் உண்மை,
இலங்கையை பொருத்தமட்டில் பிரத்யேக வகுப்புகளின் எண்ணிக்கையானது விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு இல்லை என்பதை கவலைக்கிடமானது ஒரு நகரத்தை எடுத்துக் கொண்டால் ஐந்துக்கும் மேற்பட்ட பிரத்யேக வகுப்புகள் காணப்படும் அதேவேளை நடுத்தரமான நகரமாயின் அங்கு குறைந்தது 3 பிரத்யேக வகுப்புகளேனும் அமைக்கப்பட்டுள்ளமை கண்கொண்டு பார்க்கக் கூடியது நாடளாவிய ரீதியில் 8000ற்கும் மேற்பட்ட பிரத்யேக வகுப்புகள் காணப்படுகின்றன.
பிரத்யேக வகுப்பு என்றதுமே மாணவர்களின் மத்தியில் ஒரு கௌரவத்தை தோற்றுவிக்கிறது காரணம் ஒரு வகுப்பில் எந்த மாணவர் சிறந்த புள்ளிகளை பெறுகிறாரோ அந்த மாணவர் பிரத்யேக வகுப்பு செல்கிறார் என்பதுதான். ஆகவே பிரத்யேக வகுப்பு சென்றால் சிறந்த புள்ளியை பெறலாம் என்பது மாணவர்களின் கண்ணோட்டம் இந்நிலையானது கௌரவத்தோடு நின்று விடாது தன்மானத்தை தூண்டும் கருவியாகவும் பிரத்யேக வகுப்புகள் காணப்படுகின்றது. அதாவது ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் இருக்கும் பட்சத்தில் 25 மாணவர்கள் பிரத்யேக வகுப்புக்கு செல்கின்றனர் எனில் 5 மாணவர்கள் பாடசாலையில் மட்டும் தங்களது கல்வியை தொடர்கின்றனர் எனில் அவர்கள் ஒரு கேளிக்கையாகவே பார்க்கப்படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
அடுத்ததாக ஆசிரியர்கள் தங்களது கடமை என்ன என்பதை மறந்து செயல்பட எத்தணிக்கின்றனர். மாணவர்களை தங்கள் பிரத்யேக வகுப்பிற்கு எவ்வாறு வரவழைக்கலாம். ஏனைய ஆசிரியர்களின் பிரத்யேக வகுப்பிற்கு சமூகமளிக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்பதையே சிந்தித்து கொண்டிருக்கின்றனர். பாடசாலையில் தங்கள் பணிகளை நிறைவேற்ற ஊதியத்தைப் பெற்றுக் கொண்டு பாடசாலை கலைத்திட்டம், ஆசிரியர் கையேடு என்பவற்றை தங்களுடைய வகுப்பிற்காக பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில் பாடசாலை பாடத்திட்டங்களை சுருக்கமாக கற்பித்து விட்டு முழுமையான பாடப்பரப்பை பிரத்யேக வகுப்பில் கற்பிக்கின்றன. இங்கு மாணவர்களுக்கான பிரத்யேக வகுப்புகளின் முக்கியத்துவத்தை மறைமுகமாக ஆசிரியர்கள் புரிய வைக்கின்றனர். ஒட்டுமொத்தமாக கூறினால் பாடசாலையில் பகுதி நேரமாகவும் (வரவிற்காக மட்டும்) பிரத்யேக வகுப்புகளில் நேரமாகவும் உழைக்கின்றனர் முழு ஆசிரியர்கள்
EDUCATION
நேரத்தை ஒதுக்குதல் போன்றவற்றின் முக்கியத்துவத்தை பல் கல்வி முறைகள் வலியுறுத்துகின்றன. ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு சமூகளிக்காமை மற்றும் கல்வி கற்கின்ற நேரத்தின் இழப்பு (மேலதிக பாடத்திட்ட நிகழ்வுக்கான ஒத்திகைகள் மற்றும் பயிற்சிகள்) போன்றன பாடசாலைக் கல்வியின் தரத்தை குறைப்பதோடு, ஆசரியர்கள் பாடத்திட்டத்தை அவசரமாக முடிப்பதற்கு வழிவகுக்கின்றது. ஆசிரியர்கள் இவ்வாறான செயலில் ஈடுபடுவதானது ஆசிரியர் தொழிலுக்கே இழுக்காகும் எனினும் ஒரு சில ஆசிரியர்கள் திறம்பட செயல்படுவதும் தங்களது கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவதும் குறிப்பிடத்தக்கன.
இவ்வாறு பிரத்யேக வகுப்புகளை நடத்துவதற்கான காரணம் என்ன என பார்க்கும்போது ஒரு மாணவரிடம் ஒரு மணித்தியாலத்திற்கு அல்லது ஒரு நாளுக்கு இவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளையும் முன்வைத்து தங்களுக்கான மேலதிக வருமானங்களை சுட்டிக் கொள்வதாக அமைகின்றது. இத்தோடு இவை நின்று விடுவதில்லை பிரத்யேக வகுப்பிற்கு அனுமதிக்க ஒரு தொகை நுழைவுக் கட்டணம் என்றொரு சம்பிரதாயத்தையும் இத்துடன் சேர்த்து பின்பற்றுகின்றனர். தற்போது வர்த்தக பொருட்கள் விளம்பரங்களை விட பிரத்யேக வகுப்புகளின் விளம்பரங்கள் தெருவிற்கு தெரு வீதிக்கு வீதி பார்க்க முடிகிறது. அதிலும் கொடுமை இரண்டு பாடங்களை கற்கும் போது ஒரு பாடம் இலவசமாக கற்பிக்கப்படும் என்பதுதான்.
ஒரு மாணவன் புலமை பரீட்சையிலோ, சாதாரண தர பரீட்சையிலோ, உயர்தர பரீட்சையிலோ அதிக புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்தால் அந்த புகழ் குறிப்பிட்ட மாணவர் கல்வி கற்ற பாடசாலையை சென்றடைகின்றதோ இல்லையோ பிரத்யேக வகுப்புகளை சென்றடைந்து விடுகின்றன. குறித்த மாணவர்களுக்கான புகழ் என்ன, வரவேற்பு என்ன அமர்க்களப்படுத்தி விடுகின்றது பிரத்யேக வகுப்பு சுவர்கள்,
இதை அனைத்தையும் கவனிக்கும் பெற்றோர்கள் ஒரு பக்கம், தங்கள் பிள்ளைகள் சிறந்த பெறுபேற்றினை பெற வேண்டுமா? ஒரு டியூஷன் வகுப்பு தேவை. அயலவர்களிள் பிள்ளைகள் பாடசாலை முடிந்து ஒரு பிரத்யேக வகுப்பிற்கு செல்கின்றதா, நாம் தங்கள் பிள்ளை இரண்டு பிரத்யேக வகுப்பிற்கு சேர்த்து விடுவோம் என்பதாக இருக்கின்றது. தங்களது மாத வருமானத்தில் பாதி தொகை பிள்ளையின் பிரத்யேக வகுப்பிற்கு செலவழிக்கும் பெற்றோர்களும் இருக்கின்றன.
எதிர்வீட்டார் கூறியதை விட நான் ஒன்று அதிகம் கூற வேண்டும் என்பது அம்மாக்களின் ஆசை, தனது பிள்ளைகள் விரும்பி தான் பிரத்யேக வகுப்பிற்கு செல்கின்றனரா? என்பது பெற்றோர்களுக்கு அப்பாற்ப்பட்ட விடயமாகும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறையா அந்த நாளைக்கு என்ன பிரத்யேக வகுப்பிற்கு சேர்ப்பது எனும் யோசனையே பெற்றோர்களுக்கு பெரும் வேளை. யார் கேட்டாலும் தனது பிள்ளைக்கு சாப்பிட கூட நேரம் இல்லை அவ்வளவு படிப்பு என சொல்லி பெருமைப்பட வேண்டும் இவ்வளவுதான்.
இவ்வாறான நிலைமை பாடசாலையில்தான் தாக்கம் செலுத்தும். பாடசாலைக்கு செல்லாவிட்டாலும் பிரத்யேசு வகுப்பிற்கு சென்றால் போதுமானது என்பது மாணவர்களின் மனநிலையை மாற்றியமைத்து பாடசாலைகளில் மாணவர்களின் வரவை குறைக்கின்றது. இவை அனைத்தையும் தாண்டி பிரத்யேக வகுப்புகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள் தங்கள் கல்வியை தொடர, பிரத்யேக வகுப்பிற்கு செல்ல முடியாத மாணவர்கள், பாடசாலையை நம்பி இருக்கும் மாணவர்களின் நிலை என்னவாகும்.
நகர்ப்புறத்தில் வசிக்கும் மாணவர்கள் படித்து முன்னேறி செல்ல கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் அப்படியே எந்தவித முன்னேற்றமும் இன்றி அதே நிலைக்கும் மீண்டும் தள்ளப்படுகின்றனர். இங்கு தான் கல்வியில் சமத்துவம் பாதிக்கப்படுகின்றது. தரமான கல்வியை கற்பதற்கு சமமான வாய்ப்புகள் இல்லாமை, நிறைவான கல்வியைப் பெறத் தடையாக உள்ளது. இத்தகைய ஒரு நிலையால், பின்தங்கிய மாணவர்கள் உருவாக்கப்படுகிறார்கள். இத்தகைய பின்தங்கிய மாணவர்களுக்கு பிற்காலத்தில் அனுகூலமற்ற வேலைவாய்ப்புகளே கிடைப்பதால் சமூக பின்னடைவுகள் ஏற்படக்கூடும்,
பிரத்யேக வகுப்புகளின் செல்வாக்கு பாடசாலையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணராத பெற்றோர்களும் இன்னும் இச்சமூகத்தில் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. இவ்வாறான தரமற்ற செயல்பாடுகள் சமூகத்தில் இருக்கும் வரை தரமான கல்வியாக இருந்தால் என்ன இலவசக் கல்வியின் இலக்காக இருந்தால் என்ன அனைத்தும் விடைகள் எட்டப்படாத கேள்வியாக தான் இச்சமூகத்தில் உலாவிக் கொண்டிருக்கும்
எனினும் ஒரு சில கல்வி நிலையங்கள் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் வினைத்திறனாக செயல்படுவதும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு பணம் அறவிடாது சேவை செய்வதும் அடையாளப்படுத்தக்கூடியது. இவ்வாறான வகுப்புக்களினால் மாணவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
தொடர்ச்சியாக சுற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதானது உளரீதியான தாக்கத்திற்கு உள்ளாக்கும். கல்வியை சுமையாக எண்ணுவதால் கல்வியில் சோர்வு நிலை ஏற்படுகிறது. ஏனைய திறன்களில் அக்கறை காட்டாமல் இருக்கின்றனர். போட்டித் தன்மை குறைந்து கல்வியில் பொறாமை தன்மை மேலோங்குகின்றது. எதற்காக கற்றலில் ஈடுபடுகின்றோம். என்பதை இறுதிவரை உணராமலேயே கல்வியை தொடர்கின்றன கல்வியில் புள்ளிகளுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் செயற்படுகின்றனர். மழலை மாறாத பிஞ்சுப் பருவத்திலேயே பிள்ளைகளை பிரத்யேக வகுப்புக்களுக்கு தத்துக் கொடுத்துவிடுவதால் அவர்கள் வீட்டு குழலை மறந்தே விடுகின்றனர்.
பாரதி கூறிய "மாலை முழுவதும் விளையாட்டு" என்ற கூற்றுக்கே இங்கு இடமில்லாமல் போய்விட்டது. குழந்தைகள் விளையாட்டில் ஈடுபடும் போது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக காணப்படுவர். தற்போது அதற்கான நிலையில் மாணவர்களும் இல்லை அதே நேரம் அதற்கான சூழ்நிலையை அமைத்து தர பெற்றோர்களும் தயாராக இல்லை.
தங்கள் பிள்ளைகள் ஒரு சிறந்த மனிதனாக வரவேண்டும் என்ற ஆசை நியாயமானது தான் அவர்களுக்கான சிறந்த கல்வியை வழங்க முயற்சிப்பதும் சரியானதுதான். ஒரு உயிரற்ற பொருளை தொடர்ச்சியாக இயக்கும்போது சில நேரங்களில் அது உடைவதற்கோ பழுதாகவோ வாய்ப்பு உண்டு அப்படி இருக்கும்போது பிள்ளைகளை தொடர்ச்சியாக சிரமப்படுத்தும் போது உடல் உளரீதியான பாதிப்புகளுக்கு உள்ளாகும் நிலை உருவாகும். முயற்சி முக்கியம் அதே நேரம் அது அழுத்தமாக அமைந்து விடக்கூடாது. தொடர்ச்சியான அழுத்தம் எதிர்மறையான விளைவை தோற்றுவிக்கும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். கல்வி முக்கியம்தான் இருப்பினும் பிள்ளைகளின் ஆரோக்கியம் எந்த அளவிற்கு சிறப்பாக இருக்கிறதோ என்பதை பொறுத்துதான் கல்வியில் சாதிக்க முடியும், இதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும்.

ப.இனோஜா
நான்காம் வருடம் கல்வியியல்
சிறப்புக் கற்கை மாணவி கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்.