மட்டக்களப்பு வின்சன்ட் பாடசாலையில் 56 மாணவர்களுக்கு 9A

(வரதன்)

வெளியாகியுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 56 மாணவர்கள் 9A  சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர்


176 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்ததில் 56 மாணவர்கள் 9A சித்திகளையும். 19 மாணவர்கள் 8 A,B சித்திகளையும். 17 மாணவர்கள் 7A 2B சித்திகளையும்  பெற்றுள்ளனர்.

சித்தியடைந்த மாணவர்கள் பாடசாலை வளாகத்தில் பாடசாலை சமூகத்திடமிருந்து வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெற்றுக் கொண்டனர். பாடசாலை அதிபர் தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் இன்றைய நிகழ்வுகள் இடம் பெற்றது.