சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்ய புதிய திட்டம்



எதிர்காலத்தில் குற்றங்களை அடிப்படையாக கொண்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை முறையாகப் பறிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கிலேயே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ரங்கிரி தம்புலு ரஜமஹா விகாரைக்கு நேற்று பிற்பகல் சென்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அங்கு மேலும் கருத்து தெரிவித்த பதில் காவல்துறை மா அதிபர்,

“நாட்டில் அதிகளவில் வீதி விபத்துகள் நடக்கின்றமை பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மக்கள் கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதுதான்.

திறமையின்மையின் அடிப்படையில் சாரதி அனுமதிப்பத்திரம் புள்ளியிடப்பட்டு இரத்து செய்யும் நடைமுறையை நடைமுறைப்படுத்த உள்ளோம்.” எனத் தெரிவித்தார்.