பாரத் லங்கா 10,000 வீடுகள் திட்டம் ; நுவரெலியா ஸ்க்ரப் தோட்டத்தில் 30 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது!



பாரத் லங்கா 10,000 வீடுகள் திட்டத்தின் தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து நுவரெலியா ஸ்க்ரப் தோட்டத்தில் 30 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (19) காலை இடம்பெற்றது.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்படும் பாரத் லங்கா வீடமைப்புத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பத்தாயிரம் வீடுகளை நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாக நுவரெலியா ஸ்க்ரப் தோட்டத்தில் தற்காலிக வீடுகளில் தங்கியுள்ள முப்பது குடும்பங்களுக்கான வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நுவரெலியா மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் இணைச் செயலாளர்கள் மற்றும் இணைப்பாளர்களும் ஆன வினோத் ஜி மற்றும் சட்டத்தரணி சிவன் ஜோதி யோகராஜா ஆகியோரின் தலைமையில் இன்றைய தினம் காலை ஸ்க்ரப் தோட்டத்தில் நடைபெற்றது.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முழு வழிகாட்டுதலின் கீழ், இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வினால் இந்த வீடமைப்புத் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.