விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவிற்க்கான விலை நிர்ணயம் !


விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்கும் வகையில், பெரும்போக செய்கைகாலத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான குறைந்தபட்ச விலையை விவசாய அமைச்சு வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பின்படி, அரிசி வகைகள் மற்றும் ஈரப்பதத்தின் அடிப்படையில் ஒரு கிலோ நெல்லுக்கான குறைந்தபட்ச விலை மாறுபடும்.

14 வீதம் ஈரப்பதன் கொண்ட நெல்லுக்கான, ஒரு கிலோ நாட்டு அரிசி விலையை 105 ரூபாவுக்கும் சம்பா அரிசியை 120 ரூபாவுக்கும் கீரி சம்பா அரிசியை 130 ரூபாவுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஈரப்பதன் 14 வீதத்திற்கும் அகமாக இருந்தால், குறைந்த பட்ச விலையானது நாட்டு அரிசிக்கு 90 ரூபாவாகவும், சம்பா அரிசிக்கு 100 ரூபாவாகவும், கீரி சம்பா அரிசி ஒரு கிலோவிற்கு 120 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கொள்முதல் செயல்முறையை எளிதாக்குவதற்கும், அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் கடைக்காரர்கள் மற்றும் சேகரிப்பாளர்களுக்கு ஆதரவளிப்பதற்கும், அரசாங்கம் குறிப்பிடத்தக்க நிதி உதவியை உறுதியளித்துள்ளது. சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் அதிகபட்சமாக 50 மில்லியன் ரூபாய் கடனைப் பெறுவார்கள், அதே நேரத்தில் நெல் சேமித்து வைப்பவர்கள் மற்றும் சேகரிப்பாளர்கள் பொது மற்றும் தனியார் வங்கிகள் மூலம் 25 மில்லியன் ரூபாய் வரை கடனைப் பெறலாம்.