இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம்!இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி திருத்தப்பட்ட சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 20ஆம் திகதி முதல் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

எவ்வாறு இருப்பினும் இச்சட்டத்தின் பல பிரிவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்புகளிடம் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.