கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க நரேந்திரனின் உலோக சிலை ஜனாதிபதியால் திறப்பு!கொள்ளுப்பிட்டி வழுகாராமய உள்ளிட்ட ஐம்பெரும் ஆலயங்களின் தலைவர் விசித்ர பானக மஹரகம நந்த நாயக்க தேரோபாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி வழுகாராம விகாரை மன்றத்தில் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க நரேந்திரனின் உலோக சிலை புனருத்தாரணம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.

கொழும்பு, கொள்ளுப்பிட்டி வாலுகாராம விகாரையில் நிறுவப்பட்டுள்ள கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க நரேந்திரனின் உலோகச் சிலை ஜனாதிபதியினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

கொள்ளுப்பிட்டி வாலுகாராம உட்பட பஞ்ச மகா விகாரை விகாராதிபதி விசித்ர பானக மஹரகம நந்த நாயக்க தேரரின் 70 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கொள்ளுபிட்டி வாலுகாராம விகாரையில் நிறுவப்பட்டுள்ள கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க நரேந்திரனின் உலோகச் சிலையை திரை நீக்கம் செய்து இன்று திறந்து வைக்கப்பட்டது.

தாய்லாந்திலுள்ள மகாசங்கத்தினர் உள்ளிட்ட தாய்லாந்து நன்கொடையாளர்களின் ஆதரவுடன் இந்த உலோக சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதனுடன் இணைந்ததாக விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வெலிவிட்ட சரணங்கர சங்கராஜ தேரரின் சிலையும் திரைநீக்கம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மத அனுஷ்டானங்களும் நிகழ்த்தப்பட்டன. இந்த நிகழ்வில் ஜனாதிபதிக்கு விசேட நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.