விஹாரையின் யானைக்கு விஷம் கொடுத்தவர் கைது!
கதிர்காமம் ஸ்ரீ அபிநவராம விஹாரையின் பராமரிப்பில் இருந்த 'அசேல' என்ற யானைக்கு விஷம் கொடுத்த சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் சுமார் 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி, கட்டுகித்துல, பன்வில பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வேறு சில குற்றச் சம்பவங்களுக்காக கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே யானைக்கு விஷம் கொடுத்தமை தெரிய வந்துள்ளதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கதிர்காமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் பொலிஸாரை கண்டிக்கு அனுப்பி சந்தேக நபரை அழைத்து வந்ததாகவும் கதிர்காமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.