நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது : பவித்ரா வன்னியாராச்சி !


விவசாயிகளிடத்திலிருந்து நீருக்கு ஒரு சதமேனும் வரி அறவிடப் போவதில்லை எனவும் நீருக்கு வரி அறவிடப்படப்போவதாக கூறுவது அரசியல் கட்சிகளின் போலி பிரசாரம் எனவும் நீர்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

விவசாயிகளிடத்திலிருந்து நீருக்கு ஒரு சதமேனும் வரி அறவிடப் போவதில்லை. இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக சிலர் குறிப்பிடுகின்றனர். அவ்வாறான எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

சட்ட ரீதியாக நீர் கொள்கையொன்றை ஏற்படுத்துவதற்கான அறிக்கையொன்றே வெளியிடப்பட்டுள்ளது. அதனை தவிர்த்து இதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டு விவசாயிகளிடமிருந்து நீருக்கு வரி அறிவிட ஒருபோதும் தீர்மானிக்கவில்லை.

இது அரசியல் கட்சிகளின் போலிப் பிரசாரமாகும். ஒருபோதும் நாம் விவசாயிகளிடமிருந்து நீர் அல்லது வேறு எதற்கும் வரி அறிவிடமாட்டோம் என்றார்.