முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நடவடிக்கை !இலங்கையில் முட்டை ஒன்றின் உற்பத்திச் செலவு 30 ரூபாவாக இருந்தாலும், சந்தையில் முட்டை ஒன்றின் விலை 60 ரூபாவாக உயர்ந்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முட்டைக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அதிகபட்ச சில்லறை விலை அடுத்த வாரம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்குச் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.