நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 15 பெண்கள் உட்பட 685 பேர் கைது !


நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (13) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 15 பெண்கள் உட்பட 685 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது,கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 29 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ள 20 பேரை புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 122 கிராம் ஹெரோயின்,151 கிராம் ஐஸ்,325 கிராம் கஞ்சா,58 கிராம் ஹெரோயின் மற்றும் 280 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.