திருகோணமலையில் காட்டு யானையின் தாக்குதலில் ஒருவர் பலி !


திருகோணமலை,சூரியபுர பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சிங்கவெவ பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை,சூரியபுர பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது மருமகனுடன் மாடுகளை மேய்ப்பதற்காக வனப்பகுதிக்குச் சென்றிருந்த போதே இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.