வீடொன்றில் இருந்து துப்பாக்கிகள் , தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன !


பிலியந்தலை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகலின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த வீட்டில் T56 ரக துப்பாக்கி, 4 மகசீன்கள், 116 துப்பாக்கிகள் , 90 T 56 உயிருள்ள தோட்டாக்கள், என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த ஆயுதங்கள் இந்த இடத்திற்கு எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் கெஸ்பேவ பொலிஸார் தெரிவித்தனர்.