ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது : முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா !


தற்போதைய ஜனாதிபதி சுயாதீனமாகவோ அல்லது வேறு தரப்பினருடன் இணைந்தோ ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் குறித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ரணில் விக்ரமசிங்கவை இந்த நாட்டுமக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். நிமால் லான்சா, ரவி கருணாணாயக்க, வஜிர அபேவர்தன போன்றவர்களே ஜனாதிபதிக்கு தற்போது ஆதரவாக உள்ளனர்.

ஆனால் அவர்களிடம் இந்த நாட்டை கட்டியழுப்புவதற்கான கொள்கை திட்டங்கள் எதுவும் கிடையாது. ரணில் விக்ரமசிங்க ஆதரவாளர்கள் எனகூறிக்கொள்பவர்கள் இந்த நாடு வீழ்ச்சிப்பாதைக்கு செல்வதற்கு வழிவகுத்தவர்கள் என்பதையும் அனைவரும் அறிவார்கள்” இவ்வாறு அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.