உள்நாட்டு முன்பள்ளி ஆசிரியைகளின் கொடுப்பனவு அதிகரிப்பு !


முன்பள்ளி ஆசிரியைகளுக்கான 2500 ரூபாய் கொடுப்பனவை 5000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய முன்பள்ளி ஆசிரியைகளின் கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் முன்பள்ளி ஆசிரியப் பணியில் சுமார் 34000 பேர் கடமையாற்றி வருகின்றனர்.