ஆலய கும்பாபிஷேகத்தில் தாலிக்கொடி உள்ளிட்ட நகைகளை திருடிய பெண் கைது!




யாழ்ப்பாணம் கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட அடியார்களின் தாலிக்கொடி உள்ளிட்ட தங்க நகைகளை திருடிய பெண்ணொருவர் ஞாயிற்றுக்கிழமை (9) கைது செய்யப்பட்டார்.

கைதான பெண் வவுனியா பூந்தோட்டத்தில் வசிக்கும் கொழும்பு - வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பெண்ணை கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை நடத்தியபோது, திருடப்பட்ட தாலிக்கொடி மற்றும் தங்க நகைகள் பெண்ணின் உள்ளாடைக்குள்ளிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

இப்பெண், மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கபட்டு, பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.