மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்து பாடசாலை மாணவன் பலி ; காத்தான்குடியில் சம்பவம் !


காத்தான்குடி பகுதியில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவன் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் தவறி விழுந்து துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடி சந்தை வீதி, தொகுதி 05 இல் வசித்து வந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது வீட்டிற்கு முன்னால் உள்ள சிறிய வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிளுடன் தவறி கீழே விழுந்ததில் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடி அல்ஹிரா மகா வித்தியாலயத்தில் பத்தாம் தரத்தில் கல்வி கற்ற குறித்த மாணவன் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இளைய பிள்ளையாவார்.

உயிரிழந்த மாணவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.