பட்டிருப்புக் கல்வி வலயத்தின் முறைசாராக் கல்விப் பிரிவால் இயற்கை உணவு உற்பத்தி மையம் அமைத்தல் தொடர்பாக நடாத்தப்பட்ட பயிற்சிப்பட்டறை

(சித்தா)

பிரதேசத்திலுள்ள மூலப் பொருட்களைப் பயன்படுத்தி உணவு உற்பத்திசெய்யும் மையத்தை பாடசாலையில் அமைத்து தொழில் பயிற்சியையும் சுயதொழில் வாய்ப்பையும் மாணவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும் முகமாக புவனேந்திரன் வலயக் கல்விப் பணிப்பாளர் வழிகாட்டலில்  முறைசாராக்கல்வி பிரிவின் இணைப்பாளர் றீற்றா கலைச்செல்வனின்  ஒழுங்குபடுத்தலில் மட்/பட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் இப்பயிற்சிப்பட்டறை  இன்று நடைபெற்றது. இதன் போது பிரதேசத்திலிருந்து பெறப்பட்ட பசும்பாலில் இருந்து வட்டிலப்பம், புடிங், யோக்கட், ஜெலி, ஐஸ்கிறீம் போன்ற உணவுப்பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் வளவாளர்களாக கைத்தொழில் திணைக்களத்தின் மட்டக்களப்புக் கிளையின் District promotion officer  என்.கோகுலதாஸ், Trainer ஏ.ஜி.எம்.பரீட், இ.டி.யு.கமகே, வாழ்க்கைத் தேர்ச்சி வளவாளர் என்.டினேஸ்குமார், எஸ்.ஜெயரூபன் Business Development officer, Brandina  நிறுவனம்  ஆகியோர் கலந்துகொண்டதுடன் பாடசாலையின் அதிபர் யோகேஸ்வரன், தொழில்கல்விப்பிரிவு பொறுப்பாசிரியை திருமதி வனிதா ஆகியோர் ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தனர். இப் பயிற்சிப் பட்டறையில் மட்/பட்/பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில்  தொழில் கல்விப் பிரிவில் கற்கும் 30 மாணவர்கள் பங்குபற்றி குறித்த விடயத்தில் தேர்ச்சியடைந்தனர்.