குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு புதிய அதிகாரி !


குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக கடமையாற்றிய ஹர்ஷ இலுக்பிட்டிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பதவிக்கான கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒருவரை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி தற்போது பொது பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி பி. எம். டி. நிலுஷா பாலசூரியவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலத்திரனியல் விசா நடைமுறையை நடைமுறைப்படுத்துவதற்கான இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியமைக்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இல்லுக்பிட்டிய உயர்நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.