ரூ.40 இலட்சம் பெறுமதியான 765 கிலோகிராம் மஞ்சள் மீட்பு !


கொழும்பு-15 இல் உள்ள தனியார் களஞ்சிய வளாகத்தை சுற்றிவளைத்த நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 765 கிலோகிராம் மஞ்சளை கைப்பற்றியுள்ளனர்.

இந்த மஞ்சள் கையிருப்பின் பெறுமதி சுமார் 40 இலட்சம் ரூபாய் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

எந்தத் தகவலும் குறிப்பிடாமல், சந்தைக்கு வெளியிடத் தயாரான நிலையில், மஞ்சள் கையிருப்பு கைப்பற்றப்பட்டதாக அதிகாரசபையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த மஞ்சள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது தெரியவந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.