இது தற்போது மட்டக்களப்பில் இருந்து வடக்கு வடகிழக்காக 155 km தூரத்திலும்
திருகோணமலையிலிருந்து கிழக்கு-வடகிழக்காக 130km தூரத்திலும்,
முல்லைதீவிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 155km தூரத்திலும்
யாழ்ப்பாணத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்காக 260km தூரத்திலும்
நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு-தென்கிழக்காக 320km தூரத்திலும்
புதுச்சேரியிலிருந்து தென்கிழக்காக 410km தூரத்திலும்
சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 480km தூரத்திலும் தற்போது காணப்படுகிறது.
இது அடுத்த வரும் 12 மணித்தியாலத்தில் இலங்கையின் கரையோரமாக வடக்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனை அடுத்து இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று இரவு அல்லது நாளை காலை ஒரு ஆரம்ப நிலை சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன்பின்னர் இது எதிர்வரும் 30ஆம் திகதி ஒரு ஆழ்ந்த தாழமுக்கமாக இதன் வலு குறைவடைந்த நிலையில் தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் இடையில் காரைக்கால் பிரதேசத்திற்கும் மகாவல்லிபுரம் பிரதேசத்துக்கு இடையில தமிழ்நாட்டை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் வீசும் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50km முதல் 60km வரை காணப்படுவதுடன்,சில சந்தர்ப்பங்களில் இந்த காற்றின் வேகமானது 70km வரை அதிகரித்து வீச கூடும்.