ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பொதுத் தேர்தலில் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் : மஹிந்த ராஜபக்ஷ !



ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு பொதுத் தேர்தலில் சிறந்த பெறுபேறுகள் கிடைக்கும் என்று நம்புகின்றோம். அரசாங்கம் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு சகல பக்கங்களிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வியாழக்கிழமை (24) அம்பாந்தோட்டை, டீ.ஏ.ராஜபக்ஷ தேசிய பாடசாலையில் வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

எமது அணிக்கு சிறந்த முடிவுகள் கிடைக்கும் என்று நம்புகின்றோம். எம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணையக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன. தற்போதுள்ள அரசாங்கம் சகல பக்கங்களிலும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.