கஞ்சா செடிகளுடன் வைத்தியசாலை விடுதியின் உரிமையாளர் கைது !



பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்லாந்தை மாவட்ட வைத்தியசாலை விடுதியில் 12 கஞ்சா செடிகளுடன் வைத்தியசாலை விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல்கள் அடிப்படையில் கொஸ்லாந்தை மாவட்ட வைத்தியசாலையில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தீடீர் சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான கொஸ்லாந்தை மாவட்ட வைத்தியசாலை விடுதியில் உரிமையாளரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொஸ்லாந்தை மாவட்ட வைத்தியசாலை விடுதியில் தங்கி இருந்த வைத்தியரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.