கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொ லை !


கொழும்பு - ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெல்பொல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹங்வெல்ல, வெலிகன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சம்பவத்தன்று, கொலை செய்யப்பட்ட நபர் ஹங்வெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற மதுபான களியாட்டம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

இதன்போது, கொலை செய்யப்பட்ட நபருக்கும் 61 வயதுடைய சந்தேக நபருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளார்.

தகராறின் போது, சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்தவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, தும்மோதரை பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.