கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!



கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை , மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது கடும் மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று திங்கட்கிழமை (21) இரவு 11.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மின்னல் மற்றும் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் இடங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.