மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு



மின்னல் தாக்கியதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (07) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள கள்ளியடி வயல்வெளி பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (07) பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

43 வயதுடைய 8ஆம் வட்டாரம் மந்துவில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த அருமைநாயகம் யசோதரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் கொண்டுவரப்பட்ட நிலையில், அங்கு புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி த. பிரதீபன் முன்னிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.