மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய தமிழ் மொழி தின போட்டியின் இறுதி நாள் நிகழ்வு நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் 06.06.2025ஆம் திகதி இடம்பெற்றது.
அதிதிகள் தமிழர் பாரம்பரிய இன்னிய நடனத்துடன் நிகழ்வு மேடைக்கு அழைக்கப்பட்டனர். அதை தொடர்ந்து சுவாமி விபுலானந்தருக்கு மலர் தூபி சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
கல்வி வலய பிரதிக்கல்விக் கல்விப் பணிப்பாளர் திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறையின் தலைவர்
திருமதி விஜிதா திவாகரன் பிரதம அதியாகவும், ஓய்வு நிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.ந. தயாசீலன், கல்குடா கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் கு.சுதாகரன் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது மாணவர்களின் நிகழ்ச்சிகள் ஆற்றுகை செய்யப்பட்டன. மேலும் வலயமட்டத்தில் வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அதிதிகளாக கலந்து கொண்டவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.