கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் செல்வராசா காலமானார்


(சித்தா)


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் பேராசிரியர் செல்வராசா 27.07.2025 (இன்று) காலமானார். 

மட்டக்களப்பின் முனைக்காடு எனும் கிராமத்தில் பிறந்த இவர் ஆசிரியர், அதிபர் (மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயம்), விரிவுரையாளர், துறைத்தலைவர், கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி ஆகிய பதவிகளை வகித்து கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வேந்தராகவும் தன் பணியில் உயர்ந்து நின்றவர். 

கிழக்குக் பல்கலைக் கழகம் தவிர்ந்த ஏனைய பல்கலைக் கழகங்களிலும் விரிவுரையாளராகவும் பணியாற்றியிருந்தார். இவ்வாறு இளமைக் காலம் முதல் கண்ணிறைந்த சேவையாய் கல்விப் பணி என் பணி என கிழக்கு மண் கல்வியில் வளர பெரும்பாடுபட்டு உழைத்தவராவார்.