இலங்கை மக்கள் தாங்கள் விரும்பும் வாகனத்தை சொந்தமாக வைத்துக்கொண்டு பயன்படுத்தக்கூடிய சூழல் விரைவில் உருவாகும் என வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த “Motor Rally 2026” வாகனக் கண்காட்சி பேரணியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வது முற்றாக நிறுத்தப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய அமைச்சர், குறுகிய காலத்திற்குள் வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக தெரிவித்தார்.
தற்போது பல்வேறு வகையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக தற்போது சில தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அவை குறுகிய காலத்திற்கு மாத்திரமே நடைமுறையில் இருக்கும் என்றும் பின்னர் நீக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் வலுப்படுத்தப்பட்டதன் காரணமாகவே கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிக்க முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் காலத்தில் மக்கள் தாங்கள் விரும்பும் வாகனத்தை பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் விஜித்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.





.jpg)







.jpg)