வத்துகாமம் – யட்டிராவன பகுதியில் நேற்று வியாழக்கிழமை (13) கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட அச்சிறுமியை வத்துகாமம் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சிறுமிக்குக் கொடூரமாகத் தாக்கி, அவரை நடுவீதியில் விட்டுச் சென்ற குற்றச்சாட்டின் பேரில், சிறுமியின் தாயாரையும் அவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த நபரையும் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், சந்தேகநபர்களான தாயும் அவரது கள்ளக்காதலனும் முச்சக்கரவண்டி ஒன்றில் ஹாலிஎல – கெட்டவல வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, இன்று வெள்ளிக்கிழமை (14) முற்பகல் வேளையில் ஹாலிஎல பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனிடம் ஹாலிஎல பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


.jpg)

.jpg)





.jpg)


.jpg)