மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் அதிபருக்கு பிரியாவிடை விழா


சிசிலியா தேசியப் பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி நிதாஞ்சலி அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிரியாவிடை விழா இன்று (07)காலை 9.00 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து ஒழுங்கு செய்த இந்நிகழ்வில், ஓய்வு பெறும் அதிபருக்கு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன், வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அவரது கல்விப் பணியையும் சேவையையும் எடுத்துரைக்கும் வரலாற்றுக் குறும்படம் திரையிடப்பட்டது.

பின்னர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், நிகழ்வு உணர்வுபூர்வமான சூழலில் நிறைவுற்றது.