இலங்கை தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தின் கீழ் செயற்படும் படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கமான ACPOSL ஊடாக இந்த நடைமுறை முன்னெடுக்கப்படுவதாகவும், பார்வையாளர்களின் எண்ணிக்கை மற்றும் நிகழ்வின் தன்மைக்கு ஏற்ப ரூ.20,000 முதல் ரூ.125,000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்டத்தில் ACPOSL பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை இசைப் படைப்புகள் மற்றும் இந்திய Performing Rights Society (IPRS) ஊடாக பிரதிநிதித்துவப்படுத்தப்படும் தமிழ் மற்றும் ஹிந்தி இசைப் படைப்புகளுக்கு இந்த உரிம நடைமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் அல்லது ஏனைய வெளிநாட்டு இசையை மட்டும் பயன்படுத்தும் நிகழ்வுகளுக்கு தற்போதைக்கு இந்த உரிமம் தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
திருமணங்கள், வரவேற்பு நிகழ்வுகள், நிறுவன விழாக்கள், விருது வழங்கும் நிகழ்வுகள், DJ மற்றும் நேரடி இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் இந்த நடைமுறைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், சுப்பர் மார்க்கெட்டுகள், வங்கிகள், வணிக நிலையங்கள், ஷொப்பிங் மால்கள், சினிமாக்கள், அலுவலகங்கள் மற்றும் பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்து வாகனங்களில் இசையைப் பயன்படுத்துவதற்கும் வருடாந்த உரிம நடைமுறை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் வெளியீட்டாளர்களுக்கு உரிய ரோயல்டி தொகையைப் பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ACPOSL தெரிவித்துள்ளது.





.jpg)



.jpg)
.jpg)


