தாய்லாந்தில் 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள்


தாய்லாந்தில் முதற்கட்டமாக 10 ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலங்கை – தாய்லாந்து உடன்படிக்கைகள் மூலம் இந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தகவல் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அமைச்சர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.