கடந்த 2014 செப்டம்பர் 12ஆம் திகதி வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள காவத்தமுனை பகுதியில் வைத்து சட்டவிரோதமாக ரி 56 ரக துப்பாக்கி அதன் 30 ரவைகளுடன் சந்தேகநபரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்தனர்.
அவருக்கு எதிராக சட்டவிரோதமாக ரி 56 ரக துப்பாக்கியை உடமையில் வைத்திருந்தமை மற்றும் உயிர் உள்ள 30 துப்பாக்கி தோட்டாக்களை வைத்திருந்த இரு குற்றச்சாட்டின் கீழ் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் வழக்கின் எதிராளி சார்பில் சட்டத்தரணி பிரகாஷ் ஆஜராகியதுடன் வழக்காளியான பொலிஸ் சார்பில் அரச சட்டவாதி எஸ். அனுஷன் ஆஜராகி வாதாடி வந்தனர்.
இந்த நிலையில் குறித்த நபர் குற்றவாளியாக கடந்த மாதம் 08-24-2026 மன்றில் இனங்காணப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை 18ஆம் திகதி தண்டனை வழங்கும் தீர்ப்பு என நீதிபதி அறிவித்தார்.
இதன் பிரகாரம் இந்த வழக்கின் தண்டனைக்கான தீர்ப்பாக முதலாவது குற்றமான சட்டவிரோதமாக ரி.56 ரக துப்பாக்கி உடமையில் வைத்திருந்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும். இரண்டாவது குற்றமான உயிர் உள்ள 30 தோட்டாக்களை வைத்திருந்த குற்றத்திற்காக 25 ஆயிரம் ரூபா அபராதமாக செலுத்துமாறும் அதனை செலுத்த தவறினால் 3 மாத கால சாதாரண சிறை தண்டனை என நேற்று வெள்ளிக்கிழமை மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார்.


.jpg)


.jpg)



.jpg)
.jpg)


