
15 வயது சிறுமி ஒருவர் கருத்தரித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் காதலனும் அதற்கு உடந்தையாக இருந்த காதலனின் தந்தையும் சிறுமியின் தந்தையும் எத்திமலை பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை (22) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மொனராகலை - எத்திமலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
எத்திமலை பிரதேசத்தில் வசிக்கும் 15 வயதுடைய சிறுமியே இவ்வாறு கருத்தரித்துள்ளார்.
சிறுமியின் தாய் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், சிறுமி தனது தந்தை மற்றும் சகோதரர்களுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.
குறித்த சிறுமி கொட்டியாகலை பிரதேசத்தில் வசிக்கும் இளைஞடன் காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில் அந்த இளைஞன் பல நாட்களாக சிறுமியின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த அண்மையில் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் சிறுமி கருத்தரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் எத்திமலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பிரதான சந்தேக நபரான காதலனும், அதற்கு உடந்தையாக இருந்த காதலனின் தந்தையும் சிறுமியின் தந்தையும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எத்திமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.