பியகம ஆரம்ப பாடசாலையில் நான்காம் (4-B) வகுப்பில் கல்வி கற்கும் 14 மாணவர்களுக்கு திடீரென ஏற்பட்ட அரிப்பு காரணமாக திங்கட்கிழமை (21) மதியம் பியகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எட்டு மாணவர்கள் மற்றும் ஆறு மாணவிகள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என கூறப்படுகிறது.
குறித்த வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பாடசாலைக்கு கொண்டு வந்த கார்பன் பேனாவால் தோழர்கள் மீது கோடு வரைந்துள்ளார், பின்னர் மாணவர்கள் அதை தண்ணீர் ஊற்றி கழுவிய பிறகு அரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.