இந்த விபத்து வியாழக்கிழமை (10) அதிகாலை 5:00 மணியளவில் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் தோட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களை டெஸ்போட் பகுதியில் உள்ள மக்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார், வேனின் சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் வேனுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.