கேரள கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மருதங்கேணி பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது சந்தேகநபர்கள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், 38 பொதிகளில் பொதியிடப்பட்ட நிலையில் சுமார் 83 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டது.
தப்பிசென்ற சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.