இனிய பாரதியின் மற்றுமொரு சகாவான சபாபதி மட்டக்களப்பில் கைது


இனிய பாரதியின் மற்றுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து இன்று (29) மாலை கொழும்பில் இருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

 இனிய பாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் வெலிகந்தை தீவுச்சேனை வதைமுகாமில் இருந்து செயற்பட்டுவந்தவரும் இனிய பாரதியின் சகாவான அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பா.சபாபதியை கிரான் வைரவர் கோவில் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சி.ஐ.டியினர் கைது செய்துள்ளனர்.

இவரை கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை சிஐடியினர் மேற்கொண்டு வருகின்றனர்.