
சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை சுமார் 14 ஆண்டுகளின் பின்னர் பாரிய அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாகச் சந்தைத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க வரிக் கொள்கை, மற்றும் தங்கத்திற்கு மாற்றாக வெள்ளியில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளமை என்பன இதற்கான காரணங்களாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 0.3 வீத அதிகரிப்புடன், 39.40 டொலர்களாக விற்பனை செய்யப்படுகிறது.
இது, 2011 செப்டம்பருக்குப் பின்னர் வெள்ளிக்குக் கிடைத்த அதிகபட்ச விலையாகும்.
இதேவேளை நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த ஆண்டு வெள்ளி விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 42 டொலர்களை எட்டக்கூடும் என்று கணிப்பிடப்பட்டுள்ளது.