நிறுத்தியிருந்த உழவு இயந்திரத்தில் மோதி இளம் தந்தை பலி !


மோட்டார்சைக்கிளில் வந்த ஒருவர், உழவு இயந்திரத்துடன் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் திருகோணமலை, கோமரங்கடவல, புலிக்கண்டிகுளம் பகுதியில் நேற்றிரவு (09) இடம்பெற்றுள்ளது.

புலிக்கண்டிகுளம் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்துடன் மோதியதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் தெரிய வருகின்றது.

இவ்விபத்தில் கோமரங்கடவல, பக்மீகம பகுதியைச் சேர்ந்த 28 வயதான லக்ஷ்மன் குணபால எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்