எசல பௌர்ணமி தினத்தன்று அதிக விலைக்கு விற்பனை செய்யத் தயாராக வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் நுவரெலியா ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று புதன்கிழமை (09) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் லிந்துலை மட்டுகலை பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் லிந்துலை - மட்டுயாய பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 126 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த ஊழல் தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.