சூரிய ஒளியில் விளையாடுவது மற்றும் அதனை அனுபவிப்பதன் குறைபாடு காரணமாக நாட்டில் சிறுவர்களிடையே விற்றமின் “டி” குறைபாடு கடுமையான உடல்நல பிரச்சினையாக மாறியுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இது கடந்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரச்சினையாகவே இருந்ததில்லை.எனினும் தற்போது அது ஒரு பிரச்சனையாக மாறி யுள்ளதாகவும் குழந்தை நல மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இக்கால சிறுவர்கள் வெளியில் சென்று வெயிலில் விளையாடுவதற்குப் பதிலாக, தங்கள் புலமைப்பரிசில் பரீட்சைக்குப் படிப்பது, தனியார் வகுப்புக்களுக்குச் செல்வது, இணைய விளையாட்டுக்களில் பொழுதைப் போக்குவது தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் அதிகமாக தொலைபேசிகளைப் பயன்படுத்துவது போன்றவற்றில் மிக மும்முரமாக ஈடுபட்டுள்ளமையும் இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்பாடுகளுக்கு மாறாக, சிறுவர்கள் வெளியில் சென்று விளையாடுவதற்கு பெற்றோர்கள் வாய்ப்புகளை வழங்குவதுடன் அதற்கான அனுமதியையும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் பெற்றோர்களை வலியுறுத்தியுள்ளார்.+