மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை மேற்கு கோட்டமட்ட சிறுவர் விளையாட்டு நிகழ்வு இன்று(17) வியாழக்கிழமை தாண்டியடி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இதன்போது கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளை சேர்ந்த தரம் 3, தரம் 4, தரம் 5 வகுப்புக்களை சேர்ந்த ஆண், பெண், கலப்பு போன்ற அணிகள் போட்டிகளில் பங்கேற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், முதலிடத்தினை பெற்ற அணியினருக்கு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
கோட்டக்கல்விப் பணிப்பாளர் க. ரகுகரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதிகல்விப் பணிப்பாளர்களான திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் , திருமதி தே. உதயகரன் உதவிக்கல்விப் பணிப்பாளர்களான திருமதி. உ. விவேகானந்தம், எஸ்.சக்திதாஸ், எஸ்.சந்திரகுமார், பாட இணைப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.