கறுப்பு ஜூலை வன்முறை சம்பவங்களை அரசாங்கம் வெள்ளையடிப்பு செய்து மறைக்க முற்படுகின்றது - அர்ச்சுனா !



நாட்டில் 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறை சம்பவங்களை அரசாங்கம் வெள்ளையடிப்பு செய்து மறைக்க முற்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றில் இன்று (24) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கறுப்பு ஜூலை வன்முறைச் சம்பவங்களின் போது, அதிகளவில் தமிழர்களின் உடமைகளும் அபகரிக்கப்பட்டிருந்தன. அந்த துயர சம்பவங்களை ஒரு விழாவாக மாற்றி கொண்டாட முயற்சிப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சபையில் குற்றஞ்சாட்டினார்.