திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம்



அம்பாறை மாவட்டத்தில் கிழக்கு வங்கக் கடலோரம் தனி ஆட்சி புரியும் திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்த உற்சவமானது இலட்சக்கணக்கான மக்களின் அரோகரா கோஷங்களுடன் சிறப்பாக இடம்பெற்றது.

ஆலயத்தின் திருவிழாவானது 2025/07/07 கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து 17 நாட்கள் திருவிழாக் கோலம் பூண்டு இன்றைய தினம் (2025/07/24) திகதி சமுத்திர தீர்த்த உற்சவம் இடம்பெற்றது.

மேலும் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவமானது தமிழ் மரபில் மிக முக்கியமான நாளாகக் கணப்படுவதுடன். இது ஆடி மாதத்தில் வரும் அமாவாசை ஆகும். இந்த நாளில் நடைபெறும் தீர்த்த உற்சவம் என்பது ஆன்மிக, சமய, குடும்ப பிணைப்பு மற்றும் பித்ரு கடமைகளை நினைவூட்டும் ஒரு புனித நாளாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.